இந்தியா

மக்களுக்காக மோடி வெளியிட்ட திடீர் அறிவிப்பு! ஒட்டுமொத்த இந்தியாவும் பரபரப்பு!!

Summary:

modi announcement to people

நாடுமுழுவதும் பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. அதனால் தேசிய காட்சிகள் அனைத்தும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறது.

மேலும் பிரதமர் நரேந்திர மோடியும் தனது பதவியை நிலைநாட்டிக்கொள்ள தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் சற்று முன் முக்கிய தகவலுடன் நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளேன் எனக் கூறி பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது டவிட்டர் பக்கத்தில் ‘‘இன்று நண்பகல் 11.45 முதல் 12.00 மணிக்குள் முக்கிய தகவலுடன் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளேன். தொலைக்காட்சி, ரேடியோ, சமூகவலைதளங்களில் பாருங்கள்’’ எனக் குறிப்பிட்டுள்ளார். எனினும் எதை பற்றி திடீரென பேசப்போகிறார் என குறிப்பிடவில்லை. இதனால் நாடுமுழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


 


Advertisement