3 பேர்...3 நாள்..போட்டோஷுட் எடுப்பதாக கூறி மாடல் அழகியை ஓட்டல் அறையில் அடைத்து பாலியல் பலாத்காரம்.!

3 பேர்...3 நாள்..போட்டோஷுட் எடுப்பதாக கூறி மாடல் அழகியை ஓட்டல் அறையில் அடைத்து பாலியல் பலாத்காரம்.!


model-gang-raped-in-kochi

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 27 வயது பெண். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.மேலும் அந்த பெண் மாடல் அழகியாக இருந்து வருகிறார். அந்த பெண்ணிடம் கொச்சியை சேர்ந்த சலீம் குமார் (வயது 33), அஜ்மல் மற்றும் சமீர் ஆகிய 3 பேர் தொடர்பு கொண்டு அவரை புகைப்படங்கள் (போட்டோஷூட்) எடுக்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

அதற்காக கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு வரும்படி மாடல் அழகிக்கு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். அதனை உண்மை என நம்பிய அந்த மாடல் அழகியும் கடந்த மாதம் 28-ந்தேதி கொச்சிக்கு சென்றார். பின்னர் அவரை சலீம் குமார் உள்பட 3 பேரும் கடந்த 1-ந்தேதி நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து சென்றனர்.

gang rape

அப்போது அந்த பெண்ணுக்கு போதைப்பொருள் கலந்த குளிர்பானத்தை குடிக்க கொடுத்துள்ளனர். அதனை குடித்த பின் அந்த பெண் சுயநினைவை இழந்ததை அடுத்து ஓட்டல் அறையில் அடைத்து வைத்து 3 பேரும் சேர்ந்து கூட்டு பாலியலில் ஈடுப்பட்டுள்ளனர். இதற்கு ஓட்டலின் உரிமையாளரான கிறிஸ்டீனா என்பவரும் உடைந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் ஓட்டலில் இருந்து தப்பிய மாடல் அழகி தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சலீம் குமாரை கைது செய்தனர்.அதே சமயம் அஜ்மல், சமீர் மற்றும் ஓட்டல் உரிமையாளர் கிறிஸ்டீனா ஆகிய 3 பேரும் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.