இந்தியா

கன்னியாஸ்திரி ஒரு பாலியல் தொழிலாளி ,ஏனெனில் ...சர்ச்சையை கிளப்பிய எம்.எல்.ஏ, கிளம்பும் எதிர்ப்புகள்.!

Summary:

கன்னியாஸ்திரி ஒரு பாலியல் தொழிலாளி ,ஏனெனில் ...சர்ச்சையை கிளப்பிய எம்.எல்.ஏ, கிளம்பும் எதிர்ப்புகள்.!

கேரளாவில் கன்னியாஸ்திரி ஒருவர் பிஷப் மீது பாலியல் புகார் அளித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

மேலும்  இது தொடர்பாக கத்தோலிக்க அமைப்புகளுக்கு எதிராக முதல் முறையாக நேற்று கன்னியாஸ்திரிகள் போராட்டம் நடத்தினர். 

இந்நிலையில் பலாத்காரம் செய்யப்பட்ட கன்னியாஸ்திரி குறித்து கேரளா பூஜர் தொகுதி சுயேட்சை எம்எல்ஏ., ஜார்ஜ் கூறிய கருத்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

nun complaint sex abuse க்கான பட முடிவு

 அவர் கூறியதாவது  பிஷப் செய்தது சரி என நான் கூறவில்லை. ஆனால் அந்த கன்னியாஸ்திரி ஒரு பாலியல் தொழிலாளி என்பதில் சந்தேகம் இல்லை. ஏனெனில் பாதிரியார் அவரை 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த கன்னியாஸ்திரி கூறியுள்ளார். ஆனால் 12 முறை பலாத்காரம் செய்த போது எந்த புகாரும் அளிக்காத அவர், 13 வது முறை மட்டும் பலாத்காரம் செய்து விட்டதாக புகார் அளித்துள்ளார்.

இப்படி பட்டவரை பாலியல் தொழிலாளி என நான் கூறியதில் என்ன தவறு உள்ளது.மேலும் அவர் கற்புடன் இருந்திருந்தால் அவரை புனிதமானவராக எண்ணலாம் ஆனால் கற்பை இழந்த ஒருவரை எவ்வாறு கன்னியாஸ்திரியாக நடத்த முடியும்.

    

பிஷப்புக்கு ஆதரவாக பேசவில்லை. பெண்களால் பாலியல் பலாத்கார சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என கூறியுள்ளார் .
இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


Advertisement