டேய் இங்க வாடா! இதை கழட்டிவிடு! பழங்குடி சிறுவனை அழைத்து அமைச்சர் செய்த காரியம்! வைரலாகும் சர்ச்சை வீடியோ!

டேய் இங்க வாடா! இதை கழட்டிவிடு! பழங்குடி சிறுவனை அழைத்து அமைச்சர் செய்த காரியம்! வைரலாகும் சர்ச்சை வீடியோ!



minister-seenivasan-order-children-to-remove-her-slipper

ஒவ்வொரு ஆண்டும் நீலகிரி மாவட்டம் முதுமலையில் கோயில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று முதல் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாமில், கோவில் வளர்ப்புயானைகளுக்கு புத்துணர்வு முகாம் தொடங்கியது. அதனை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் அவருடன் மேலும் சில அதிகாரிகள் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் இதற்காக யானைகள் அனைத்தும் வரிசையில் நிற்கவைக்கப்பட்டிருந்தன. அப்பொழுது அங்கு வந்த அமைச்சரின் செருப்பு புல்லில் மாட்டிக்கொண்ட நிலையில் அமைச்சர் அங்கு நின்றுகொண்டிருந்த பழங்குடியின சிறுவர் இவர்களை அழைத்துள்ளார். அவர்கள் பயந்துகொண்டே அமைச்சரின் அருகே வந்துள்ளனர். 

அப்பொழுது அமைச்சர் சற்றும் எதிர்பாராதவிதமாக அந்த சிறுவனிடம் தனது செருப்பின் பெல்டை கழற்றிவிட கூறியுள்ளார். இதனை கண்ட அங்கிருந்த அதிகாரிகள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் சிறுவர்கள் செருப்பை கழற்றிவிட்ட நிலையில் அமைச்சர் சீனிவாசனின் உதவியாளர் செருப்பை முழுவதுமாக கழற்றி ஓரமாக வைத்தார். இதுகுறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி, வைரலான நிலையில் அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.