ராணுவ வீரர் கடத்திக் கொலை... மீண்டும் மணிப்பூரில் நடந்த பயங்கரம்.!

ராணுவ வீரர் கடத்திக் கொலை... மீண்டும் மணிப்பூரில் நடந்த பயங்கரம்.!


military-man-abducted-and-killled-police-begins-investi

மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் தனது மகன் கண் முன்னே கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக இருதரப்பினர் இடையே பயங்கர மோதல் நடைபெற்று வருகிறது. இதில் பல நூற்றுக்கணக்கான மக்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ராணுவத்தில் பணியாற்றி வந்த மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த செர்டோ தாங்தாங் கோம் என்பவர் விடுமுறைக்காக தனது சொந்த மாநிலம் திரும்பி இருக்கிறார்.

Indiaஇந்நிலையில் தலைநகர் இம்பால் அருகே தாருங் என்ற இடத்தில் தனது 10 வயது மகனுடன் நின்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் இவரை கடத்திச் சென்றனர். மேலும் கடத்திச் செல்லப்பட்ட இவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது காவல்துறை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

Indiaமறைந்த ராணுவ வீரருக்கு மனைவி மற்றும் ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.