புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
'பைத்தியம்' என்று அழைத்ததற்காக தாயை கொலை செய்த மகன்.! மேலும் வீட்டை தீயிட்டு கொளுத்திய பகீர் சம்பவம்.!
ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராமில் 59 வயது பெண்மணி 'பைத்தியம்' என்று அழைத்ததற்காக, தனது மனநலம் குன்றிய மகனால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் தாயை கொலை செய்த பின்பு, அவரது வீட்டிற்கும் தீ வைத்துள்ளார் அந்த மகன். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
27 வயதாகும் அத்ரிஷ் என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். அதற்கான சிகிச்சைகளையும் பெற்று வருகிறார். குருகிராம் செக்டார் 48 இல் உள்ள விபுல் கிரீன்ஸ் என்கிற ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் தனது தாய் ரானு ஷா மற்றும் தந்தையுடன் வசித்து வருகிறார்.
அத்ரிஷ் அவ்வப்போது தனது பெற்றோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ராணுஷா தனது மகனை 'பைத்தியம்' என்று கூறியுள்ளார். அப்போது அத்ரிஷின் தந்தை வெளியூரில் இருந்ததாக கூறப்படுகிறது.
அந்த வார்த்தையை கேட்டு கோபத்தின் உச்சிக்கு சென்ற அத்ரிஷ், தனது தாயை பலமுறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் அவர் குடியிருந்த வீட்டையும் தீயிட்டு கொளுத்தியுள்ளார். அந்த வீட்டில் இருந்து புகை வரவே அருகில் வசிப்பவர்கள் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ரானு ஷா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அத்ரிஷின் மனநலம் குறித்து மதிப்பீடு செய்யப்பட்ட பின்பு இந்த வழக்கு குறித்து எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியும் என்று மூத்த போலீஸ் அதிகாரி மயங்க் குப்தா தெரிவித்துள்ளார்.