பேய் ஓட்டுவதாக கூறி சாமியார் செய்த மோசமான செயல்! கதறி துடிக்கும் பெண்! வீடியோ.

பேய் ஓட்டுவதாக கூறி சாமியார் செய்த மோசமான செயல்! கதறி துடிக்கும் பெண்! வீடியோ.


Men whips possessed women in the name of warding off evil spirit

பேய், பிசாசு இதெல்லாம் பொய், வெறும் மூட நம்பிக்கை என்று பலர் கூறினாலும், அதெல்லாம் உண்மை, பேய் - பிசாசு இருக்கிறது என்று நம்புபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இந்நிலையில் பேய் பிடித்துவிட்டதாக கூறி பேய் பிடித்தவர்கள் கேட்கும் உணவு, பொருள் இவற்றை வாங்கி கொடுப்பது, பேய் ஓடுகிறேன் என கூறி அவர்களை அடித்து துன்புறுத்துவது போன்ற சம்பவங்களும் நடந்துதான் வருகிறது.

இதுபோன்ற சம்பவங்களில் ஒன்றுதான் இது. கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், ஆபானி என்கிற இடத்தில் அமைந்துள்ள மாரிகாம்பா அம்மன் கோவிலில் பூசாரியாக இருக்கும் மல்லிகார்ஜுன் என்பவர், ஒரு பெண்ணுக்கு பேய் ஓட்டுவதாகக்கூறி சரமாரியாக சவுக்கால் அடிக்கின்றார்.

தன்னை அடிக்க வேண்டாம் என்று அந்த பெண் பலமுறை கதறியும் அந்த சாமியார் விடுவதாக இல்லை. அந்த பெண்ணின் தலை முடியை பிடித்து கையில் இருக்கும் சவுக்கால் அடித்து துன்புறுத்துகிறார் அந்த சாமியார்.

அந்த காட்சிகள் அங்கிருந்தவர்களால் பதிவு செய்யப்பட்டு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.