பெண்களுக்குள் வெடிக்கும் #MeToo விவகாரம்; திசைதிருப்பும் முயற்சியா! இதை ஏன் இப்படி யோசிக்க கூடாது!

பெண்களுக்குள் வெடிக்கும் #MeToo விவகாரம்; திசைதிருப்பும் முயற்சியா! இதை ஏன் இப்படி யோசிக்க கூடாது!


meetoo in different direction

பெண்கள் ஆண்கள் மீது பாலியல் புகார் கூறி வந்த நிலையில், தற்போது ஒரு பெண் மற்றொரு பெண் மீது #MeToo மூலம் கூறிய பாலியல் புகார் இந்த அமைப்பை வேற பரிமாணத்திற்கு கொண்டுசென்றள்ளது. 

#MeToo அமைப்பின் மூலம் திரைத்துறை, அரசியல், விளையாட்டு என பல துறைகளைச் சேர்ந்த பிரபலங்களின் முகத்திரைகள் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டன. ஆனால் இப்பொழுது பெண்களுக்கு உருவாகும் இந்த பிரச்சினையை வைத்து இந்த அமைப்பினை வேறு விதத்தில் திசை திருப்பும் முயற்சி நடைபெறுகிறதா என்ற சந்தேகம் எழுகின்றது.

MeToo

தொடரி', 'வேலைக்காரன்', 'மகளிர் மட்டும்' உள்பட சில படங்களில் நடித்திருந்த மாயா கிருஷ்ணன், விரைவில் வெளியாகவிருக்கும் '2.0', 'துருவ நட்சத்திரம்' படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார். 

இந்நிலையில் மாயாவுடன் மேடை நாடகங்களில் இணைந்து நடித்த அனன்யா ராம்பிரசாத் என்கிற பெண் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் மாயா அவருடன் நெருங்கிப் பழகி பாலியல் தொல்லைகள் கொடுத்தாக புகார் அளித்தள்ளார். 

MeToo

இதனைத் தொடர்ந்து ஒரு பெண் மற்றொரு பெண் மீது பாலியல் புகார் கூறியுள்ள இந்த விவகாரம் பெண்களுக்கு ஆதரவாக அமைக்கப்பட்ட #MeToo அமைப்பின் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

இதனையடுத்து தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகாருக்கு மறுப்பு தெரிவித்து மாயா தன் பேஸ்பக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் அனைத்தும் பொய்யானவை. என் மீது எழும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க நான் தயார். இதனால் சட்டரீதியாக எடுக்கப்படும் எந்த நடவடிக்கைக்கும் நான் ஒத்துழைத்து உண்மையை வெளிக்கொண்டு வர தயார் என்றும் பதிவிட்டுள்ளார். 

MeToo

மேலும் அவர் தன் மீது புகார் அளித்துள்ள அனன்யா மீது மான நஷ்ட வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

இந்த சம்பவத்தை பார்க்கும் போது இப்படி பெண்களுக்குள்ளே புகார் அளிக்க வைத்து இந்த #MeToo அமைப்பின் நடவடிக்கையை திசைத்திருப்பும் நோக்கத்தில் யாரும் செயல்படுகிறார்களோ என்ற எண்ணம் தோன்றுகிறது. இப்படி சூடான விவகாரங்களை கிளப்பிவிட்டு பெரிய பிரபலங்கள் தப்பித்துக்கொள்ளும் ஒரு திட்டமாக கூட இருக்கலாம் எனவும் சந்தேகம் எழுகிறது. 

MeToo

ஏனெனில் நமக்கு தான் ஒரு பிரச்சினையை மறைக்க மற்றொரு பிரச்சனையை கிளப்பிவிட்டாலே போதுமே. புதிய பிரச்சனையில் பழைய பிரச்சனையை மறப்பது தானே நமது வழக்கம். இங்கு எந்த பிரச்சினையும்  ஒரு தீர்வால் முடிவுக்கு வருவதில்லை, மாறாக மற்றொரு பிரச்சனையால் மறைக்கப்படுகிறது என்பது தான் உண்மை. 

பெண்களுக்குள் வெடிக்கும் #MeToo விவகாரம்; திசைதிருப்பும் முயற்சியா!  இதை ஏன் இப்படி யோசிக்க கூடாது!