அத்தியாவசிய மருந்துபொருட்களின் விலை ஏப்ரல் 1 முதல் உயருகிறது..! NPPA அனுமதி..!!Medicine Price increased from April

 

இந்தியாவில் செயல்பட்டு வரும் மருந்துகளின் உற்பத்தி நிறுவனங்கள் அவ்வப்போது தங்களது மூலப்பொருட்களின் விலைக்கேற்ப மருந்துகளின் விலையையும் அதிகரிக்க இந்திய அரசிடம் கோரிக்கை வைத்தது.

அதேபோல தற்போது WPI பணவீக்கம் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் 384 அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலையை உயர்த்த வேண்டும் என NPPA-விடம் கோரிக்கை வைக்கப்பட்டது. 

medicine

இதனையடுத்து இதய நோய் மருந்துகள் உட்பட 1000க்கும் மேற்பட்ட மருந்து வகைகளின் விலையானது 12% உயர்த்த NPPA அனுமதியளித்துள்ள நிலையில், இந்த விலை உயர்வு ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.