இந்தியா 18 Plus

அதிர்ச்சி! மது போதையில் இளம் பெண்ணிற்கு நடந்த கொடுமை! சீரழிந்து தப்பித்த இளம்பெண்!

Summary:

Medical college student abused in uttar pradesh

பெண்கள், குழந்தைக்ளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது மது. மது போதையில் என்ன செய்கின்றோம் என்று தெரியாமல் பலர் பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவருக்கு கட்டாயப்படுத்தி மது அருந்தவைத்து மூன்று பேர் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் சண்டோலி மாவட்டத்தில் உள்ள யுனானி மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவர் பேருந்திற்காக காத்திருக்கையில் அங்கு வந்த மூன்று மர்ம நபர்கள் அந்த பெண்ணை கடத்தி சென்று அவரை கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்துள்ளனனர்.

https://cdn.tamilspark.com/media/17124axr-1551094040-3674.jpg

பின்னர் அந்த மூன்று நபர்களும் மது அருந்திவிட்டு அந்த மாணவியை மாறி மாறி கற்பழித்துள்ளனனர். பின்னர் மயக்கம் தெளிந்து எழுந்த அந்த பெண் மூன்று நபர்களும் மது போதையில் மயக்க நிலையில் இருப்பதை பார்த்து அங்கிருந்து தப்பித்து காவல் நிலையத்தில் இதுபற்றி தெரிவித்துள்ளார்.

அந்த பெண் கொடுத்த புகாரை வைத்து வழக்கு பதிவு செய்து போலீஸார் ஒருவனை கைது செய்துள்ளனர். மேலும் இரண்டு பேரை தேடி வருகின்றனர்.


Advertisement