இந்தியா

சாகவேண்டிய வயசா இது!! சிப்ஸ் வாங்க சென்ற சகோதரன்.. செல்ஃபி மோகத்தால் இளம் பெண் பரிதாப மரணம்..

Summary:

இந்தூரில் செல்ஃபி மோகத்தில் எம்.பி.பி.எஸ் மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத

இந்தூரில் செல்ஃபி மோகத்தில் எம்.பி.பி.எஸ் மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேச  மாநிலம் இந்தூர் உள்ள சிலிக்கான் சிட்டி பகுதியில் வசித்து வந்தவர் மருத்துவ மாணவி நேஹா அர்சி. இவர் சாகர் மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு மருத்துவ படிப்பை படித்து வந்துள்ளார். இந்நிலையில் தினமும் நேஹாவும் அவரது சகோதரர் இருவரும் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம்.

அந்த வகையில் சம்பவத்தன்று நேஹாவும் அவரது சகோதரரும் வழக்கம்போல் நடைப்பயிற்சி மேற்கொண்டனர். அப்போது லேசாக மழைத்தூறல் ஏற்பட்டுள்ளது. கிளைமேட் நன்றாக இருந்ததால், தனது சகோதரியை அங்கையே நிற்குமாறு கூறிவிட்டு அருகில் இருந்த கடைக்கு சிப்ஸ் வாங்குவதற்காக சென்றுள்ளார் நேகாவின் சகோதரர்.

அநேரம் பார்த்து, நேகா செல்பி எடுக்க ஆசைப்பட்டுள்ளார். இதனால் அங்கிருந்த பாலம் ஒன்றின் சுவரில் ஏறி, நேகா செல்பி எடுத்தபோது கால் தடுமாறி கீழே விழுந்துள்ளார். நேகா கீழே விழுந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

நேகா கீழே விழுந்ததில் அவரது உடலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தநிலையில், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டுவந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேகா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறிய வாக்குமூலத்தை வைத்து, இது ஒரு விபத்து என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

செல்பி மோகத்தால் இளம் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement