பாலியல் தொல்லை கொடுப்போருக்கு இதுதான் சரியான தீர்ப்பு; இனியாவது திருந்துவார்களா காமக் கொடூரர்கள்.!

mathiapiratheam - teacher - sathna court -


mathiapiratheam---teacher---sathna-court--

மத்திய பிரதேச மாநிலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிபவர் மகேந்திர சிங் கோண்ட். அப்பள்ளியில் பயின்று வந்த 4 வயது சிறுமியை கடந்த ஜூன் 30-ஆம் தேதி அன்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்நிலையில் அச்சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஜபல்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சாத்னா கூடுதல் மாவட்ட விசாரணை நீதிமன்றம் அவருடைய வழக்கினை நேற்று எடுத்து மீண்டும் விசாரித்த நிலையில் அவருக்குத் தூக்குத் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதை மத்திய பிரதேச உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. அதன் படி மகேந்திர சிங் மார்ச் 2ம் தேதி காலை 5 மணிக்கு தூக்கிலிடப்பட உள்ளார்.