"பரிகாரத்தால் வந்த வினை..." 16 வயது சிறுவன் படுகொலை.!! தாத்தா கைது.!!



maternal-grand-father-arrested-for-beheading-sixteen-ye

தோஷத்தை தீர்ப்பதற்காக 16 வயது சிறுவனை நரபலி கொடுத்த முதியவர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் உத்திர பிரதேச மாநிலத்தில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக இறந்த சிறுவனின் தாத்தாவை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 16 வயது சிறுவனின் தலையில்லாத உடல் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து காவல்துறை நடத்திய விசாரணையில் சிறுவனின் தலை கண்டுபிடிக்கப்பட்டதோடு கொலை செய்யப்பட்ட சிறுவன் யாஷ் என்பது தெரிய வந்தது.

India

இந்தக் கொடூர சம்பவத்தில் சிறுவனின் தாய் வழி தாத்தாவான சரண்சிங் என்பவரை காவல்துறையினர் விசாரித்ததில் பல அதிர்ச்சியளிக்கும் உண்மை சம்பவங்கள் வெளியாகியிருக்கிறது. கொலை செய்யப்பட்ட யாஷின் தாய் மற்றும் தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டனர். இதற்கு தோஷம் தான் காரணம் என அப்பகுதியைச் சேர்ந்த மந்திரவாதி ஒருவர் தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த தோஷத்தை போக்குவதற்கு பேரனை பலி கொடுக்க வேண்டும் எனவும் பரிகாரம் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: "உனக்கு சொத்து தரமாட்டாரு.." தந்தை எரித்து கொலை.!! காதலியுடன் கைது செய்யப்பட்ட மகன்.!!

அந்தப் பரிகாரத்தை நிறைவேற்றுவதற்காக சரண் சிங் தனது மகள் வழி பேரனை தலை துண்டித்து கொலை செய்தது காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சரண் சிங் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: நாமக்கலில் பயங்கரம்... வடமாநில இளைஞர்கள் படுகொலை.!! குற்றவாளிகளுக்கு வலை வீச்சு.!!