கொரோனா வார்டில் நடந்த திருமணம்.! பாதுகாப்பு கவச உடையுடன் கரம் பிடித்த மணமகள்.!

கொரோனா வார்டில் நடந்த திருமணம்.! பாதுகாப்பு கவச உடையுடன் கரம் பிடித்த மணமகள்.!



marriage in corona ward

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நாள் ஒன்றுக்கு சுமார் 3.5 லட்சம் பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் கேரள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மணமகனை பாதுகாப்பு கவச உடை அணிந்து கொண்டு மணமகள் ஒருவர் கரம் பிடித்துள்ளார்.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் கைனாகரி கிராமத்தை சேர்ந்த சரத்மோன் என்பவருக்கு வீட்டில் திருமண ஏற்பாடு செய்துள்ளனர். இந்தநிலையில் சமீபத்தில் அவருக்கும், அபிராமி என்ற இளம்பெண்ணிற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்தநிலையில் திருமணம் சில நாட்கள் இருக்கும் நிலையில் மணமகனுக்கும், அவரது அம்மாவிற்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தாய் மகன் இருவரும் அப்பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் அவர்களது திருமணம், நிச்சயிக்கப்பட்ட தேதியில் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் குறித்த தேதியில் திருமணத்தை முடிக்க இரு வீட்டாரும் விருப்பம் தெரிவித்தனர்.  இதனால் மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் மணமகள் கவச உடை அணிந்து அந்த மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் திருமணம் செய்துக்கொண்டுள்ளனர். இவர்களது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.