ஆணவ கொலை.. பெற்ற மகளை கொடூரமாக கொலை செய்த தந்தை.. பரபரப்பு சம்பவம்..!

ஆணவ கொலை.. பெற்ற மகளை கொடூரமாக கொலை செய்த தந்தை.. பரபரப்பு சம்பவம்..!


Manslaughter.. The father brutally killed his daughter.. Sensational incident..!

கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள ஆலுவா கருமால்லூர் பகுதியில் வசித்து வருபவர் முகமது ஹாபிஸ். இவருக்கு 14 வயதில் மகள் ஒருவர் உள்ளார். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமி அதே பள்ளியில் படிக்கும் வேற்று மதத்தை சேர்ந்த +1 மாணவனை காதலித்து வந்துள்ளார்.

இவர்களின் காதல் விவகாரமானது முகமது ஹாபிஸ் தெரிய வரவே மகளை கடுமையாக கண்டித்துள்ளார். ஆனால் சிறுமியால் மாணவன் மீது ஏற்பட்ட காதலை கைவிடமுடியவில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மகளின் பையில் செல்போன் ஒன்று இருப்பதை கண்டு முகமது ஹாபிஸ் அதிர்ச்சி அடைந்தார்.

KERALA

பின்னர் இதுகுறித்து மகளிடம் விசாரிக்கையில் காதலனுடன் பேசுவதற்காக வைத்துள்ளதாக கூறியுள்ளார். இதனைக் கேட்ட அதிர்ச்சியடைந்த முகமது ஹாபிஸ் அங்கிருந்த இரும்பு ராடால் மகளை கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் பலவந்தமாக வாயில் பூச்சிக்கொல்லி மருந்தை ஊற்றி குடிக்க வைத்துள்ளார். இதனால் சிறுமி சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்துள்ளார்.

இதனையடுத்து சிறுமி மயக்கம் அடைந்து கிடப்பதை கண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். ஆனால் அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமியின் உடலில் இரத்த காயங்கள் இருப்பதைக் கண்டு உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியதில் மகளை இரும்பு கம்பியால் அடித்து வலுக்கட்டாயமாக பூச்சி மருந்து குடிக்க வைத்ததை முகமது ஹாபிஸ் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

KERALA

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காதல் விவகாரத்தில் பெற்ற மகளை தந்தை இரும்பு கம்பியால் அடித்தும் விஷம் குடிக்க வைத்தும் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.