இந்தியா

சென்னை-மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து!!

Summary:

mangalore express accident

சென்னை - மங்களூரு இடையே தினமும் இயக்கப்படும் விரைவு ரயிலானது, இன்று வழக்கம்போல் மங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தது. அந்த ரயில் கேரள மாநிலம், சோரனூர் அருகே வந்து கொண்டிருந்தபோது, ரயிலின் இரண்டு பெட்டிகள் எதிர்பாராதவிதமாக தடம் புரண்டு விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தால் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து தகவலறிந்த அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.  

அங்கு நடந்த விபத்தினால், அப்பகுதியில் சிறிதுநேரம், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை சரிசெய்யும் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக செயல்பட்டனர். 
 


Advertisement