இந்தியா

20 வயது இளம் பெண்ணை நடுரோட்டில் வைத்து இளைஞர் செய்த காரியம்! அதிர்ச்சியான பொதுமக்கள்!

Summary:

Man stabbed 20 years old girl in bengalore for one side love

கர்நாடக மாநிலம் மங்களூரில் ஒருதலை காதலால் இளைஞர் ஒருவர் 20 வயது இளம் பெண்ணை பொது இடத்தில் கத்தியால் குடித்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுஷாந்த் என்ற 22 வயது இளைஞர் அதே பகுதியை சேர்ந்த திஷா என்ற 20 வயது இளம் பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்துவந்துள்ளார். இவரது காதலை திஷா மறுத்துள்ளார். இந்நிலையில் இருவரும் சந்தித்த நேரம் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட, தான் மறைத்துவைத்திருந்த கத்தியால் சுஷாந்த் திஷாவை குத்தியுள்ளார்.

அருகில் இருந்த பொதுமக்கள் அவரை பிடிப்பதற்குள் அதே கத்தியால் தானும் கழுத்தில் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இருவரையும் மீட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இந்த கொலை முயற்சிக்கு காரணம் ஒருதலை காதலா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கா என விசாரித்து வருகின்றனர்.


Advertisement