அமேசானில் ஆர்டர் செய்த இளைஞருக்கு வந்த பார்சல்.! திறந்து பார்த்தபோது காத்திருந்த இன்ப அதிர்ச்சி.!

அமேசானில் ஆர்டர் செய்த இளைஞருக்கு வந்த பார்சல்.! திறந்து பார்த்தபோது காத்திருந்த இன்ப அதிர்ச்சி.!


Man mistakenly got phone who ordered Power Bank via Amazon

அமேசான் இணையதளத்தில் 1400 ரூபாய் மதிப்புள்ள பவர் பேங்க் ஆர்டர் செய்த நபருக்கு  எட்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள தொலைபேசி அனுப்பப்பட்டுள்ள சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

கேரளாவின் மலப்புரத்தை சேர்ந்தவர் நபில் நஷித். இவர் கடந்த 10 ஆம் தேதி அமேசான் இணையதளத்தில் 1400 ரூபாய்  மதிப்புள்ள பவர் பேங்க் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். இந்நிலையியல் கடந்த 15 ஆம் தேதி அவருக்கு அமேசானில் இருந்து ஒரு பார்சல் வந்துள்ளது. தான் ஆர்டர் செய்த பவர் பேங்க் வந்துவிட்டது என ஆசையோடு பார்சலை திறந்துள்ளார் நபில் நஷித்.

பார்சலை திறந்தவருக்கு அதிர்ச்சியுடன் ஆச்சரியமும் காத்திருந்தது. ஆம், அவருக்கு வந்த பார்சலில் பவர் பேங்கிற்கு பதிலாக 8 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ரெட்மி டியோ மொபைல் அவருக்கு தவறுதலாக டெலிவரி செய்யப்பட்டுள்ளது. பொருள் நமக்கு தவறுதலாக அனுப்பப்பட்டுள்ளதை உணர்ந்த நபில் நஷித் தனக்கு வந்த பார்சல், செல்போன் ஆகியவற்றை புகைப்படமாக எடுத்து, அனைத்து விளக்கத்தையும் கூறி டிவிட்டர் வழியாக அமேசான் நிறுவனத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

amazon

உடனே இதற்க்கு பதிலளித்த அமேசான் நிறுவனம், உங்கள் குறையை ஏற்றுக் கொண்டோம். அந்த மொபைலை நீங்கள் வைத்து கொள்ளுங்கள் அல்லது யாருக்காவது நன்கொடையாக கொடுத்துவிடுங்கள் என்றுள்ளனர்.சுதந்திர தினத்தன்று அமோசன் கொடுத்த இன்ப அதிர்ச்சியை நஷித் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.