அட பாவி மனுஷா... 2 சிறுவர்களை கொலை செய்து கண்களை தோண்டிய தாய் மாமன்.!!
ஜார்க்கண்ட் மாநிலம் அம்பாதிக் கிராமத்தை சேர்ந்த பிரேம் என்பவருக்கு 10 வயதில் ஒரு மகளும், 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்தநிலையில் பிரேமின் மைத்துனர் (அதாவது அவரது மனைவியின் சகோதரர்) நேருவிற்கும், பிரேமிற்கும் நிலத்தகராறு இருந்துவந்துள்ளது.
அவர்களிடையே இருந்த நிலத்தகராறால் பிரேம் மீது ஆத்திரம் அடைந்த நேரு தனது சகோதரியின் இரண்டு பிள்ளைகளையும் நேற்று முன்தினம் மாலை அவரது வயலுக்கு அழைத்துச் சென்று கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் இருவரின் கண்களையும் தோண்டி எடுத்துள்ளார்.
இந்தநிலையில், தனது குழந்தைகளை காணவில்லை என பிரேம் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டநிலையில், குழந்தைகளின் சடலங்கள் நேற்று காலையில் கண்டுபிடிக்கப்பட்டன. இதனையடுத்து சிறுவர்களை கொலை செய்த நேருவை போலீசார் தேடிவருகின்றனர்.