நிறுத்தப்பட்ட குழந்தை திருமணம்.! கடுப்பாகி மாப்பிள்ளை செய்த படுபயங்கர கொடூரம்.! பேரதிர்ச்சி சம்பவம்!!Man killed 16 year girl for stopping child marriage

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள சூர்லப்பி கிராமத்தில் வசித்து வருபவர் சுப்ரமணி. இவரது மகள் 16 வயது நிறைந்த மீனா. இவர் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருந்தார். இந்த நிலையில் மீனாவிற்கு பிரகாஷ் என்ற 32 வயது நபருடன் திருமணம் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

நிறுத்தப்பட்ட குழந்தை திருமணம்

மேலும் நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற ஏற்பாடுகளும் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் சிறுமிக்கு திருமண வயது பூர்த்தியாகவில்லை. அவர் மைனர் என்பதால் திருமணம் செய்யக்கூடாது என குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள், சிறுமியின் வீட்டிற்கு சென்று அறிவுறுத்தியுள்ளனர். அதனை ஏற்றுக் கொண்ட சிறுமியின் பெற்றோர்கள் நிச்சயதார்த்தத்தை நிறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: திருமண விருந்தில் விஷம்.? 100+ உறவினர்களுக்கு வாந்தி, பேதி.. அதிர்ச்சி சம்பவம்.!

marriage

தலையை துண்டாக்கி கொடூர கொலை 

இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் சிறுமியின் பெற்றோரிடம் கடுமையாக வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் அவர்களை கடுமையாக தாக்கிவிட்டு, அரிவாளால் சிறுமியின் தலையை துண்டாக வெட்டிவிட்டு, தலையை எடுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார்.பின்னர் இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சிறுமியை கொன்றுவிட்டு தப்பி ஓடிய பிரகாஷை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தையே அதிர வைத்துள்ளது.

இதையும் படிங்க: இந்த கல்யாணமே வேண்டாம்.. இனிப்பால் வெடித்த தகராறு.! மணப்பெண் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சி!!