இந்தியா லைப் ஸ்டைல்

ஆன்லைனில் ஆர்டர் பண்ணது ஒன்னு!! வந்தது ஒன்னு!! பார்சலை திறந்துபார்த்த நபருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!!

Summary:

ஆன்லைனில் மவுத்வாஷ் ஆர்டர் செய்த நபருக்கு ரெட்மி போன் பார்சலாக வந்த சம்பவம் இணையத்தில் வைர

ஆன்லைனில் மவுத்வாஷ் ஆர்டர் செய்த நபருக்கு ரெட்மி போன் பார்சலாக வந்த சம்பவம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

மும்பையைச் சேர்ந்த லோகேஷ் தாகா என்பவர் பிரபல ஆன்லைன் வணிகத்தளமான அமேசான் மூலம் சமீபத்தில் 4 கோல்கேட் மவுத்வாஷ் ஆர்டர் செய்துள்ளார். அவர் ஆர்டர் செய்த சில நாட்கள் கழித்து அமேசான் நிறுவனத்தில் இருந்து அவருக்கு பார்சல் ஒன்று டெலிவரி செய்யப்பட்டது.

தனக்கு வந்த பார்சலை திருந்துபார்த்த லோகேஷ் சற்று அதிர்ச்சியடைந்தார். காரணம், அவர் ஆர்டர் செய்த மவுத் வாஷிற்கு பதிலாக ரெட்மி நோட் 10 போன் இருந்துள்ளது. ஒருவேளை பார்சலை மாற்றி கொடுத்துவிட்டார்களோ என நினைத்து, பார்சலில் இருந்த முகவரியை பார்த்தபோது, முகவரியும், பெயரும் சரியாக இருந்துள்ளது.

ஆனால் பார்சல் உள்ளே இருந்த ரசீதை பார்த்தபோது, அதில் வேறொரு நபரின் பெயரும், முகவரியும் இருப்பதை லோகேஷ் பார்த்துள்ளார். உடனே இதுகுறித்து அமேசான் நிறுவனத்துக்கு தெரியப்படுத்திய லோகேஷ், தனக்கு வந்த பார்சலை திருப்பி கொடுக்கவும் முடிவு செய்துள்ளார்.

இவை அனைத்தையும் லோகேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட, தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகிவருவதோடு, பலரும் அவருக்கு பாராட்டுகளையும் தெரிவித்துவருகின்றனர்.


Advertisement