நள்ளிரவில் கழிவறையில் கேட்ட திடீர் சத்தம்!! கழிவறை சென்று பார்த்த இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி..

நள்ளிரவில் கழிவறையில் கேட்ட திடீர் சத்தம்!! கழிவறை சென்று பார்த்த இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி..


Man found 6 feet snake at bathroom

நள்ளிரவில் வீட்டில் இருந்த கழிவறையில் இருந்து கேட்ட சத்தத்தை அடுத்து, வீட்டின் உரிமையாளர் கழிவறைக்கு சென்று பார்த்தபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

ஆஸ்திரேலியா நாட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள வீடு ஒன்றில் இளைஞர் ஒருவர் தனியாக வசித்துவந்துள்ளார். சம்பவத்தன்று இரவு அவர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, வீட்டின் கழிவறையில் இருந்து தானாக தண்ணீர் வெளியேறும் சத்தம் கேட்டுள்ளது.

தன்னை தவிர வீட்டில் வேறு யாரும் இல்லாதபோது கழிவறையில் இருந்து எப்படி சத்தம் வருகிறது என்ற அச்சத்தில் அந்த இளைஞர் கழிவறைக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு சென்றுவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், அவரது கழிவறையின் உள்ளே 6 அடி நீளம் கொண்ட பெரிய பாம்பு ஒன்று நெளிந்துகொண்டிருந்தார்.

Mysterious

பாம்பை பார்த்ததும் நடுங்கிப்போன அவர், உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட போராட்டத்திற்கு பிறகு அந்த பாம்பை அங்கிருந்து மீட்டுள்ளனர். கழிவறையின் இரண்டு சுவர்களுக்கு இடையே இருந்த இடைவெளி மூலம் அந்த பாம்பு உள்ளே வந்தித்திருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் கூறியுள்ளனர்.