இந்தியா

வீடியோ: பார்க்கும்போதே மனசு பதறுது!! 19 வது மாடியில் இருந்து தப்பிக்க முயன்றவர் தவறி விழுந்து பலி..

Summary:

வீடியோ: பார்க்கும்போதே மனசு பதறுது!! 19 வது மாடியில் இருந்து தப்பிக்க முயன்றவர் தவறி விழுந்து பலி..

61 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் நபர் ஒருவர் 19 வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை பதறவைத்துள்ளது.

மும்பை குரே சாலையில் உள்ளது "ஒன் அவிக்னா பார்க்" என்ற அடுக்குமாடி குடியிருப்பு. 61 மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பின் 19 வது மாடியில் இன்று காலை 11.50 மணியளிவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. மாடியில் தீப்பற்றி எரிவதை பார்த்த, அந்த கட்டிடத்தின் காவலாளி அருண் திவாரி (30) என்பவர் உடனே 19 வது தளத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு சென்ற சிறிது நேரத்தில், தான் நெருப்புக்கு நடுவே மாட்டிக்கொண்டதை அறிந்த அவர், பால்கனி வழியாக கீழே இறங்கி தப்பிக்க முயன்றுள்ளார். சுவரை புடைத்துக்கொண்டு நீண்ட நேரமாக தொங்கிக்கொண்டிருந்த அவர், சிறிது நேரத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் உடனே மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அவர் வரும் வழியில்லையே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் காவலாளி அருண் திவாரி மாடியில் இருந்து கீழே விழும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பார்ப்போரை பதறவைத்துள்ளது.


Advertisement