இந்தியா

டிக்டாக்கில் வித்தியாசமான வீடியோ வெளியிட ஆசை! தற்கொலை அனுபவத்திற்காக வாலிபர் செய்த காரியத்தால் துடிதுடித்த குடும்பத்தினர்!

Summary:

Man drink poision for suicide experience

துமகூரு மாவட்டம் கொரட்டகெரே அருகே கவுரகானஹள்ளி என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் தனஞ்செய். 25 வயது நிறைந்த இவருக்கு கடந்த 5 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சமூகவலைதளங்களில் பிசியாக இருக்கும் தனஞ்செய் அடிக்கடி டிக்-டாக்கில் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

 இந்நிலையில் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு தனது விவசாய தோட்டத்திற்கு சென்று அங்கிருந்த பூச்சிகொல்லி மருந்தை குடித்துள்ளார். மேலும்  அதனை தனது செல்போனில் வீடியோவாக எடுத்த அவர் வீடியோவில் தற்கொலை செய்துகொள்ளும் அனுபவத்தை குறித்து தெரிந்து கொள்ளதான் மருந்தை குடிப்பதாகவும் கூறியுள்ளார். பின்னர் இந்த வீடியோவை அவர் டிக்-டாக்கில் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் உடனே தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு தனஞ்செய் வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு போராடியுள்ளார். பின்னர் அவரை மீட்டு அவரது நண்பர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சமீபத்தில் அவர் உயிரிழந்தார்.

பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டநிலையில் அவர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்பொழுது தனஞ்செய் தனது மனைவியுடன் சந்தோஷமாகவே வாழ்ந்து வந்துள்ளார்.மேலும் தற்கொலை செய்து கொள்வது குறித்த அனுபவம் தனக்கு வேண்டும் என்ற ஆர்வத்திலேயே  அவர் இத்தகைய விபரீத முடிவை எடுத்துள்ளதும் தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement