இந்தியா

40 ஆண்டுகள் குடும்பத்திற்காக வெளிநாட்டில் உழைத்த நபர்! திரும்பி வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Summary:

Man died who returned from foreign after 40 years

தனது குடும்பத்திற்காக வெளிநாட்டில் 40 ஆண்டுகள் வேலை பார்த்துவிட்டு வீடு திரும்பிய கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு அதே குடும்பத்தால் ஏற்பட்ட சோகம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கேரளாவை சேர்ந்தவர் குஞ்சி. திருமணம் முடிந்து பிள்ளைகள் இல்லாத நிலையில் தனது சகோதரிகளின் குடும்பத்தை காப்பாற்ற ஐக்கிய அமீரகம் சென்றுள்ளார். அங்கு பல்வேறு வேலைகள் பார்த்து அதில் சம்பாதித்த பணத்தை கொண்டு தனது சகோதரிகளின் வாழ்வாதரை உயர்த்தியுள்ளார் குஞ்சி. தனக்கு சொந்த வீடு இல்லாத நிலையிலும் தனது சகோதரிகளுக்கு சொந்த வீடு, பணம், பொருள் இப்படி ஏகப்பட்ட வசதிகளை செய்து கொடுத்துள்ளார்.

40 ஆண்டுகளாக வெளிநாட்டில் உழைத்துவிட்டு வயதான காரணத்தால் சொந்த ஊருக்கு திரும்பிய அவரை அவரது சகோதரிகள் கண்டுகொள்ளவில்லை. ஒருகட்டத்தில் அவரையும், அவரது மனைவியையும் வீட்டை விட்டே விரட்டியுள்ளனர்.

இதனால் சோகத்தின் உச்சிக்கு சென்ற குஞ்சி தனது மனைவியை அழைத்துக்கொண்டு மீண்டும் வெளிநாட்டிற்கே சென்றுள்ளார். ஆனால், வயதான காரணத்தால் இந்த முறை அவருக்கு யாரும் வேலை கொடுக்கவில்லை. ஒருகட்டத்தில் தங்க இடம் இல்லாமல், உணவில்லாமல் சிறிது நாட்களிலையே மரணமடைந்துள்ளார் குஞ்சி. கணவன் இறந்த சில நாட்களிலையே அவரது மனைவியும் மரணமடைந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Advertisement