த்ரிஷாவை விட வயது குறைவு... ஆனால் அம்மா கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நடிகை! யார் தெரியுமா?
விபரீத முயற்சியில் கைக்குட்டையை எடுக்க முயன்ற நபர்! கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பெரும் துயரம்! அதிர்ச்சி சம்பவம்!!

கர்நாடக மாநிலம் ஹாசன் நகர் அருகேயுள்ள உதயகிரி என்ற பகுதியில் வசித்து வருபவர் மல்லப்பா. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டின் பால்கனிக்கு சென்ற அவர் அங்குள்ள மின்கம்பியில் தனது கைக்குட்டை கிடப்பதை கண்டுள்ளார்.
இந்த நிலையில் அவர் அந்த கைக்குட்டையை எடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அவருக்கு கை எட்டவில்லை. இந்நிலையில் மல்லப்பா வீட்டிலிருந்த ஒட்டடைக்குச்சி ஒன்றை எடுத்து, தனது கையில் துணி ஒன்றை சுற்றிக்கொண்டு அதனை வைத்து கைக்குட்டையை எடுக்க முயற்சி செய்துள்ளார். உலோகத்தாலான அந்த ஒட்டடை குச்சி மின்கம்பியில் மோதி, மல்லப்பா மீது தீ போன்று பெருமளவில் மின்சாரம் பாய்ந்துள்ளது. அதில் பாதிக்கபட்டு மல்லையா சரிந்து விழுந்துள்ளார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் கதறிக் கொண்டே ஓடிவந்து பார்த்துள்ளனர். ஆனால் மல்லையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து போலீசாருக்கு தகவலளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் மல்லையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.