இந்தியா

என் சாவுக்கு காரணம் இதுதான்! பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டு வாலிபர் எடுத்த விபரீத முடிவு! அதிர்ச்சி சம்பவம்!!

Summary:

என் சாவுக்கு காரணம் இதுதான்! பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டு வாலிபர் எடுத்த விபரீத முடிவு! அதிர்ச்சி சம்பவம்!!

விஜயாப்புரா மாவட்டம் தாளிகோட்டி தாலுகா பொம்மனஹள்ளி கிராமத்தில் வசித்து வந்தவர் வெங்கடேஷ். 25 வயது நிறைந்த அவர் ஷோபனா என்பவரை காதலித்து இரு ஆண்டுகளுக்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவர்களது வீட்டிற்கு அருகில் உறவினரான ஸ்ரீசைல் என்பவர் குடி வந்துள்ளார்.

இந்நிலையில் ஸ்ரீசைலுக்கும், ஷோபனாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் நெருங்கிய உறவாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதுகுறித்து வெங்கடேஷ் தெரியவந்த நிலையில் அவர் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால் அதனைப் பொருட்படுத்தாமல் இருவரும் தொடர்ந்து நெருங்கி பழகி வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஷோபனா மற்றும் ஸ்ரீசைலு இருவரும் வீட்டைவிட்டு ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மனமுடைந்து காணப்பட்ட வெங்கடேஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் என் மனைவி  காதலனுடன் சென்றுவிட்டாள். நான் தற்கொலை செய்துகொள்கிறேன். எனது தற்கொலைக்கு மனைவி மற்றும் ஸ்ரீசைல்தான் காரணம் என்று கூறி வீடியோ பதிவிட்டிருந்தார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் விரைந்து சென்று அவரது வீட்டில் பார்த்தபோது வெங்கடேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடியபடி  இருந்துள்ளார். உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வெங்கடேஷ் உயிரிழந்தார். இது குறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement