இந்தியா

மனைவியின் தலையை வெட்டி கையில் எடுத்துக் கொண்டு சாலையில் சென்ற நபர்! பதறிப்போன பொதுமக்கள்!

Summary:

Man Chopped wife's head off in UP

உத்தரப் பிரதேச மாநிலம் பராபங்கி பகுதியில் உள்ள பகதூர்பூர் கிராமத்தில் ஒரு குடும்பத்திற்குள் கணவன் மனைவிக்கு இடையே நடந்த சண்டையில், கணவன் உச்சகட்ட கோவமடைந்து தன்னுடைய மனைவியின் தலையை துண்டித்துள்ளார். தலையை துண்டித்த கையோடு அதனை கையில் எடுத்துக் கொண்டு அந்த நபர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

 அந்த நபர் கையில் தலையுடன் செல்வதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஒருநபர் தலையுடன் செல்கிறார் என்ற தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த நபரை மறித்து அந்த நபரின் கையில் இருந்த துண்டிக்கப்பட்ட தலையை வாங்க முயற்சித்தனர். ஆனால், அந்த நபர் திடீரென தேசிய கீதம் பாடியுள்ளார். பாரத் மாதா கி ஜே என்று கத்தியுள்ளார்.

அந்த நபரிடம் போராடி ஒரு வழியாக போலீசார் அந்த துண்டிக்கப்பட்ட தலையை வாங்கினர். இதனையடுத்து அந்த நபரிடம் நடத்திய விசாரணையில், அந்த நபர் அகிலேஷ் என்பதும், அவரது மனைவியை கொலை செய்துவிட்டு, பின்னர் தலையை துண்டித்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement