இந்தியா

பசிக்காக ஓடிவந்த கர்ப்பிணி பசுமாடு..! கோதுமை மாவில் வெடிகுண்டு..! பசுவின் வாய் வெடித்து சிதறியது..! வலியால் துடி துடித்த பரிதாபம்..!

Summary:

Man arrested on allegations of injuring cow by feeding explosive-mixed eatables

கர்ப்பிணி பசு உண்ட கோதுமை மாவில் மர்ம நபர் வெடிகுண்டை மறைத்துவைத்து வெடிக்க செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேரளாவில் கர்ப்பிணி யானை ஒன்று அன்னாசி பழத்தில் வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் ஜன்துட்டா என்ற பகுதியில் கடந்த மாதம் 26ஆம் தேதி என்று நிறைமாத கர்ப்பிணி பசு ஒன்று கோதுமை மாவை சாப்பிட்டுள்ளது.

அப்போது மாவுக்குள் இருந்த வெடிகுண்டு வெடித்ததில் பாசுவின் வாய் பெரிய அளவில் சேதமடைந்து இரத்தம் கொட்டியுள்ளது. இதுசமந்தமான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இந்த சம்பவம் குறித்து அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

அதன்படி மாட்டின் உரிமையாளரிடம் விசாரித்தபோது, தனது பக்கத்துக்கு வீட்டுக்காரரின்  நிலத்தை தனது பசு அடிக்கடி மேய்ந்து வருவதால் அவர்தான் இப்படி செய்திருக்கவேண்டும் என கூறியுள்ளார். இதனை அடுத்து போலீசார் சம்மந்தப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement