ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் செய்த நபர்.! நடுரோட்டில் வைத்து வெளுத்து வாங்கிய பொதுமக்கள்.!

ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் செய்த நபர்.! நடுரோட்டில் வைத்து வெளுத்து வாங்கிய பொதுமக்கள்.!


Man arrested for sexual harassment

ஆந்திர மாநிலம்  விசாகபட்டினம் பகுதியை சேர்ந்த  தோமன் சின்னா ராவ் என்பவர் போலீசாரின் ரவுடிகள் பட்டியலில் இருந்துள்ளார். இந்த நிலையில் தோமன் சின்னாராவ் தன்னை நல்லவன் என்று காண்பித்து கொள்வதற்காக தொண்டு அமைப்பு ஒன்றை துவக்கி சமூக சேவையில் ஈடுபடுவது போல் நடித்து வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று காலை ஒரு பள்ளிக்கு சென்ற தோமன் சின்னாராவ் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் பேசி பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பென்சில், ரப்பர் ஆகியவற்றை கொடுத்தார். பின்னர் மீதி இருந்த பென்சில், ரப்பர் ஆகிவற்றை வீட்டுக்கு எடுத்து சென்ற தோமன் சின்னாராவ் நான்காம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு படிக்கும் சில மாணவிகளிடம் வீட்டுக்கு வந்தால் பென்சில், பேனா, ரப்பர் கொடுக்கிறேன் என்று கூறி அவர்களை வீட்டிற்கு அழைத்துள்ளார்.

இதனையடுத்து பென்சில், பேனா, ரப்பர் ஆகியவை கிடைக்கும் என்ற ஆசையில் அவருடைய வீட்டுக்கு வந்த மாணவிகளிடம் அவர் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.  அங்கு வந்த மாணவிகள் வீட்டுக்கு சென்ற பின் தோமன் சின்னாராவ் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தோமன் சின்னாராவ் வீட்டுக்கு சென்று அவரை வெளியே இழுத்து வந்து தர்ம அடி கொடுத்துள்ளனர். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.