இந்தியா

மாஸ்க்கை கழட்டி வீசுங்க! கொரோனோவை கேலி செய்த வாலிபர்! இறுதியில் நேர்ந்த பரிதாபம்!!

Summary:

Man affected corono who teasing wearing mask

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 100க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது இந்நிலையில் இந்த வைரஸ் இந்தியாவிலும் பரவிய நிலையில் அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மத்திய பிரதேசம் சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த சமீர்கான் என்ற வாலிபர் சில காலங்களுக்கு முன்பு, ஏன் எல்லாரும் மாஸ்க் போடுறீங்க, கடவுள் இருக்கிறார். அவர் மீது நம்பிக்கை வையுங்கள். முதலில் மாஸ்க்கை கழட்டி தூக்கி வீசுங்கள் என கூறி டிக்டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். 

இந்நிலையில் திடீரென சமீர்கானுக்கு இருமல் மற்றும் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும் அங்கு அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் இருந்தபடி அந்த வாலிபர் மாஸ்க் அணிந்து எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள் என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் டிக்டாக் வீடியோ வெளியிட்ட விவகாரம் மருத்துவர்களுக்கு தெரியவந்த நிலையில் அவர்கள் அவரது செல்போனை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில் சமீர்கான் உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவமனையில் உள்ள தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால் அவரது செல்போனை பறிமுதல் செய்துள்ளோம். மேலும் மாஸ்க் அணிவது கட்டாயம் என்பதற்காக அவர் வெளியிட்ட வீடியோ ஷேர் செய்யப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளனர். 


Advertisement