வரலாற்று வெற்றி.! 3-வது முறையாக மேற்கு வங்க முதல்வராக பதவியேற்றார் பெண் சிங்கம் மம்தா பானர்ஜி.!

வரலாற்று வெற்றி.! 3-வது முறையாக மேற்கு வங்க முதல்வராக பதவியேற்றார் பெண் சிங்கம் மம்தா பானர்ஜி.!


Mamata Banerjee became the Chief Minister

மேற்கு வங்காளத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வின் கடும் சவாலை எதிர்கொண்டு தனது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு அதிரடி வெற்றி பெற்றுத் தந்திருக்கிறார், மம்தா பானர்ஜி. மேற்கு வங்கத்தில் 292 தொகுதிகளுக்கும் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களில் வென்றது. பாஜக 77 இடங்களில் வெற்றி பெற்றது. 

தேர்தலுக்கு முன்பு மம்தா, காலில் காயமடைந்த நிலையிலும் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து அதிகப்படியான இடங்களை கைப்பற்றி வரலாற்று வெற்றியை சாதித்திருக்கிறார். இதனையடுத்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களால் கட்சியின் சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மம்தா, தொடர்ந்து 3-வது முறையாக முதலமைச்சராக இன்று  காலை பதவியேற்றார். 

கொல்கத்தாவில் உள்ள கவர்னர் மாளிகையான ராஜ்பவனில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்றார். மம்தா பானர்ஜிக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.