தாய்மார்களே உஷார்.. குழந்தைக்கு அதிக மருந்தை கொடுத்ததால் விபரீதம்.. பயத்தில் தாய் நாடகம்.!Maharashtra Thane Mother Gives Over Dose Medicine to Baby Finally Death

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அதிக டோஸ் மருந்தை கொடுத்ததால், குழந்தை உயிரிழந்தது. பயத்தில் தாய் உண்மையை மறைக்க கடத்தல் நாடகம் ஆடியது இறுதியில் வெட்டவெளிச்சமானது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே, கல்வாவி மகாத்மா புலே நகர் பகுதியை சார்ந்தவர் சாந்தாபாய் சவாண். இவருக்கு, ஸ்ரீகாந்த் சங்கர் சவாண் என்ற 5 மாத கைக்குழந்தை இருக்கிறார். சம்பவத்தன்று, தனது மகனை மர்ம நபர்கள் கடத்தி சென்றுவிட்டதாக சாந்தாபாய் உறவினர்களிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார்.

இதனால் அதிர்ச்சிக்குள்ளாகிய உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். மேலும், உடனடியாக சம்பவ இடத்தில் இருக்கும் சி.சி.டி.வி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, காவல் துறையினருக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. மேலும், மர்ம நபர்கள் வந்து சென்ற அடையாளமும் இல்லை. 

Mumbai

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமையின் போது குழந்தை வீட்டின் அருகேயுள்ள தண்ணீர் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் ட்ரம்மில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது. சந்தேகத்தின் பேரில் குழந்தையின் தாயை காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள, குழந்தையின் கொலை விவகாரம் உறுதியானது. குழந்தைக்கு அவ்வப்போது உடல்நலப்பாதிப்பு ஏற்படுவது வாடிக்கையான நிலையில், சாந்தாபாய் மருந்து கொடுத்து வந்துள்ளார்.

சம்பவத்தன்றும் குழந்தைக்கு மருந்து கொடுத்த நிலையில், எதோ ஓர் நியாபகத்தில் அளவு தெரியாமல் அதிகளவு கொடுத்ததாக தெரியவருகிறது. இதனால் குழந்தைக்கு கொடுக்கப்பட்ட மருந்து ஓவர் டோஸாகி இறந்துள்ளது. பயத்தில் இருந்த சாந்தாபாய் கடத்தல் நாடகமாடியதும் அம்பலமானது.