ரோஹித் சர்மா, விராட் கோலியின் போஸ்டருக்கு பாலபிஷேகம்; கிரிக்கெட் ரசிகர்களின் கொண்டாட்டம் தீவிரம்.!

ரோஹித் சர்மா, விராட் கோலியின் போஸ்டருக்கு பாலபிஷேகம்; கிரிக்கெட் ரசிகர்களின் கொண்டாட்டம் தீவிரம்.!


Maharashtra Pune Fans Milk Shower to Rohit and Virat Posters 

 

2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி, இன்று குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. 

இந்த ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்தியா ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான உலகக்கோப்பையை வெல்லும் என ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியில் தொடங்கி ஒவ்வொருவரும் இந்திய அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

maharashtra

தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, இந்திய அணிக்கு தனது வாழ்த்துக்களை பதிவு செய்தார். 

இதுதொடர்பாக அவர் பேசுகையில், "இன்று இந்திய அணி உலகக்கோப்பை 2023 இறுதிப்போட்டியில் விளையாடுகிறது. இந்திய அணி பவுலிங், பேட்டிங்கில் பல சாதனைகள் படைத்துள்ளது. இது நமது ஒற்றுமைக்கான களம். இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள்" என பேசினார்.

போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதனால் இந்திய அணி பேட்டிங் செய்யவுள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேயில், கிரிக்கெட் ரசிகர்கள் விராட் கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மாவின் உருவப்படத்திற்கு பாலபிஷேகம் செய்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.