செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் போது சோகம்.. விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் பரிதாப பலி..!Maharashtra Pune 4 Workers Died Cleaning Septic Tank

தனியார் குடியிருப்பு வளாகத்தில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்ய சென்ற 4 தொழிலாளராகள் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனவே மாவட்டம், லோனி கால்போர் கிராமத்தில் தனியார் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள செப்டிக் டேங்க் இன்று சுத்தம் செய்யப்பட்டது. 

அப்போது, செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்த 2 தொழிலாளர்கள், செப்டிக் டேங்குக்குள் இறங்கி பணியை செய்துள்ளனர். இந்த சமயத்தில், எதிர்பாராத விதமாக விஷவாயு தாக்கியதில் 2 பேரும் மயங்கி இருக்கின்றனர். 

maharashtra

வெளியில் 2 தொழிலாளர்கள் இருந்த நிலையில், உள்ளே சென்றவர்களின் குரல் கேட்காமல் பதறியபடி அவர்களை மீட்க இருவரும் உள்ளே சென்றுள்ளனர். அவர்களும் விஷவாயுவின் தாக்குதலுக்கு உள்ளாகி மயங்கி விழுந்துள்ளார். 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் 4 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்தவர்கள் யார்? என அடையாளம் காணும் பணிகள் நடந்து வருகிறது.