இந்தியா

கேலி, கிண்டல், பாலியல் தொல்லை.. மனத்துடைந்த சிறுமி கடிதம் எழுதிவைத்து தற்கொலை.!

Summary:

கேலி, கிண்டல், பாலியல் தொல்லை.. மனத்துடைந்த சிறுமி கடிதம் எழுதிவைத்து தற்கொலை.!

பள்ளிக்கு சென்றுவந்த சிறுமியை கேலி, கிண்டல் செய்ததால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே வால்சந்த் நகரில், 15 வயதுடைய சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். சிறுமி தினமும் பள்ளிக்கு சென்று வரும் போது, அதே பகுதியை சார்ந்த கணேஷ் (வயது 24) மற்றும் யாஷ் அருண் கர்கேட் (வயது 18) ஆகியோர் கேலி செய்து வந்துள்ளனர். 

ஆட்கள் இல்லாத நேரத்தில் சிறுமி தனியாக வரும் பட்சத்தில், இருவரும் பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டு இருக்கின்றனர். இதனை வீட்டிலும் கூற இயலாமல் மனதிற்குள் வைத்து புழுங்கிய சிறுமி, ஒருசமயத்திற்கு மேல் வாழ்வதை விட சாவதே மேல் என்ற எண்ணத்திற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

சிறுமியின் தற்கொலை தகவலை அறிந்த காவல் துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரது அறையில் தற்கொலை செய்வதற்கு முன்னதாக எழுதி வைக்கப்பட்டு இருந்த கடிதமும் கைப்பற்றப்பட்டது. கடிதத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து சிறுமி தெரிவித்து, 14 வயது சிறுவன், கணேஷ் மற்றும் யாஷ் அருண் கர்கேட் ஆகியோரின் பெயரை குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, யாஷ் அருண் கர்கேட் மற்றும் கணேஷ், 14 வயது சிறுவன் உட்பட 3 பேரின் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Advertisement