இந்தியா

வரவேற்பு நிகழ்ச்சியில் பற்றி எரிந்த தீ.. சாவகாசமாக அமர்ந்து சாப்பிட்ட உணவு பிரியர்.!

Summary:

வரவேற்பு நிகழ்ச்சியில் பற்றி எரிந்த தீ.. சாவகாசமாக அமர்ந்து சாப்பிட்ட உணவு பிரியர்.!

மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள மும்பை பீம்வாடி பகுதியில், நேற்று முன்தினத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்திற்கு பின்னர் இரவு நேரத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். விருந்தினர்களுக்கு உணவு பரிமாறப்பட்டு உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்துள்ளனர். 

இந்நிலையில், வரவேற்பு நிகழ்ச்சியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பதறிப்போன உறவினர்கள், நண்பர்கள் அங்கும் இங்குமாக ஓட்டம் பிடித்தனர். சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர்களும் என்னமோ ஏதோவென்று பதறியபடி ஓட்டம் பிடித்த நிலையில், 2 பேர் மட்டும் எதனையும் கண்டுகொள்ளாமல் சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர்.

சிறிது நேரத்தில் தீ மளமளவென பிடித்து பற்றி எரியத்தொடங்கிய நிலையிலும், இருவரும் சாப்பாட்டில் இருந்து விலகுவதாக தெரியவில்லை. இதனை அவர்களுடன் சென்றிருந்த நபரொருவர், சிரித்தபடி வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் பெரும் வைரலாகி வருகிறது.


Advertisement