ஓடும் மின்சார இரயிலில் செல்போன் பறிப்பு.. பெண் துடிதுடிக்க மரணம்...! 4 நாட்களில் 117 புகார்கள்.. அதிரவைக்கும் தகவல்.!!

ஓடும் மின்சார இரயிலில் செல்போன் பறிப்பு.. பெண் துடிதுடிக்க மரணம்...! 4 நாட்களில் 117 புகார்கள்.. அதிரவைக்கும் தகவல்.!!


maharashtra-mumbai-govt-employee-woman-died-mobile-snat

புறநகர் மின்சார இரயில் புறப்படும் நேரத்தில் காத்திருந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட கயவனால் பெண் துடிதுடிக்க மரணமடைந்த சோகம் நடந்துள்ளது. மேலும், 117 செல்போன் பறிப்பு சம்பவங்கள் புறநகர் மின்சார இரயில் சேவையில் கடந்த 4 நடைபெற்றுள்ள அதிர்ச்சி தகவலும் அம்பலமாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, பாடலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் பாலமுகுந் க்ஹோட்கே (வயது 51). இவரின் மனைவி பிரியங்கா க்ஹோட்கே (வயது 49). தம்பதிகளுக்கு 23 வயதில் மகன் இருக்கிறார். பிரியங்கா மகாராஷ்டிரா மாநில அரசுத்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் தினமும் தனது வீட்டில் இருந்து பணியிடத்திற்கு புறநகர் மின்சார இரயில் சேவையை உபயோகம் செய்வது வழக்கம். 

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று பணிக்கு சென்ற பிரியங்கா, மீண்டும் மாலை வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது, சண்டாகுரூஸ் கிழக்கு இரயில் நிலையத்தில் இருந்து பாடலாப்பூர் செல்வதற்கு இரயில் ஏறியுள்ளார். 2 ஆம் வகுப்பு மகளிர் பெட்டியில் இவர் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். கூட்ட நெரிசலாக இருந்ததால் படிக்கு அருகேயே நின்றுள்ளார். 

இரயில் லேசாக நகரத்தொடங்கியதும் திடீரென இரயில் பெட்டிக்குள் வந்த இளைஞர், பிரிங்காவிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு அவரை கீழே தள்ளிவிட்டு தப்பி சென்றுள்ளார். இரயிலில் இருந்து கீழே விழுந்த பிரியங்காவின் தலை மற்றும் மூக்கு பகுதியில் படுகாயம் ஏற்பட்டு உயிருக்கு போராடியுள்ளார். 

maharashtra

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த இரயில்வே பாதுகாப்புப்படை அதிகாரிகள், அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி செய்யப்பட்டு இருந்த பிரியங்கா, சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட ரம்ஜான் கான் என்பவன் புதன்கிழமையே காவல் துறையினரால் கைது செய்யப்பட்டான். 

இவனின் மீது திருட்டு மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது அது கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இறுதியாக உள்ள 4 நாட்களில் மும்பை புறநகர் இரயில் பயண செல்போன் திருட்டு சம்பவங்கள் 117 நடந்துள்ளது. அனைத்தும் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.