கள்ளகாதலால் நடந்த கொலை.. மகள் கண்முன்னே தாய், தந்தைக்கு நேர்ந்த பயங்கரம்.!Maharashtra Mumbai Affair Murder Case Court Judgement

மனைவியின் கள்ளக்காதலன் மனைவியை கொலை செய்து, அவரின் கணவரை கொலை செய்ய முயற்சித்ததாக இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையை சார்ந்த பெண்மணி, கடந்த 2016 ஆம் வருடம் ஜனவரி 24 ஆம் தேதி தனது கணவர், 9 வயது மகளுடன் இரவு வீட்டில் உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர். இதன்போது, வீட்டிற்கு வந்த மர்ம நபர் கதவை தட்டியுள்ளார். கதவை திறந்து பார்க்கையில் பால் என்பவர், கையில் கத்தியுடன் வந்து நின்றுள்ளார்.

பெண்ணின் கணவரான சதேஷ் வான்கடே இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நிலையில், வான்கடேவின் வயிற்றில் பால் குத்தி இருக்கிறார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்து வந்த வான்கடேவின் மனைவி வந்தனாவை மார்பில் குத்தி கொலை செய்துள்ளார். விசாரணையில், வான்கடேவுக்கு பாலின் மனைவியுடன் தொடர்பு இருபத்து உறுதியாகியுள்ளது. 

Mumbai

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் பால் என்ற ராஜு பால், மனைவியின் கள்ளகாதலரான வான்கடேவை கொலை செய்ய முயற்சித்துள்ளார். இந்த தாக்குதலில் வான்கடே தப்பித்துக்கொள்ள, அவரது மனைவி பலியாகியுள்ளார். விசாரணைக்கு பின்னர் பாலை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்துள்ளனர். இவ்வழக்கு தொடர்பான விசாரணை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது. 

தற்போது, இந்த வழக்கின் இறுதி வாதங்கள் அனைத்தும் நிறைவுபெற்ற நிலையில், வழக்கை விசாரணை செய்த நீதிபதி குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.