ஓலா பார்ட்டி செயலியில் அறிமுகமாகி, பெண்ணை கற்பழித்து வீடியோ எடுத்து மிரட்டும் இளைஞர்: இளம்பெண்களே உஷார்.!Maharashtra Man Cheated Women 

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, சதிரபதி சம்பாஜி நகர் பகுதியில் 24 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கு இணைய வழியில் அப்பகுதியைச் சார்ந்த 24 வயது இளைஞரான சமீர் சலீம் ஷேக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இவர்கள் இருவரும் தங்களின் செல்போன் நம்பரை பரிமாறி பேசி வந்த நிலையில், சில மாதங்களுக்கு பின் இளைஞர் நான் இப்போதே உன்னை நேரில் பார்க்க வேண்டும் இல்லையேல்., கழுத்தை அறுத்து செத்து விடுவேன் என்று வீடியோ காலில் கழுத்தில் கத்தி முனையில் மிரட்டி இருக்கிறார். 

maharastra

இதனால் பதறிப்போன பெண்மணி சம்பூதி நகர் பகுதிக்கு, காதலன் கூறிய இடத்திற்கு சென்றுள்ளார். அங்குள்ள தனியார் விடுதியில் அரை எடுத்து இருவரும் தங்கிய நிலையில், அங்கு திருமண ஆசை காட்டி பாலியல் ரீதியாக காதலியை நிர்பந்தப்படுத்தி இருக்கிறார். காதலன் திருமணம் செய்து கொள்வான் என்ற நம்பிக்கையில் பெண்மணியும் ஒப்புக்கொண்டுள்ளார். 

அப்போது, இருவரின் தனிமையான நிகழ்வுகளை கயவன் வீடியோ எடுத்து, பணம் கேட்டு மிரட்டி இருக்கிறான். முதலில் பணம் கொடுத்த பெண்மணி, இறுதியில் தொல்லை தாங்காது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இருவரும் ஓலா பார்ட்டி என்ற செயலி மூலமாக அறிமுகமானது தெரியவந்துள்ளது.