மகாராஷ்டிரா துணை முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி.!

மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவாருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் பாசிடிவ் என வந்ததை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


Maharashtra-Deputy-CM-Ajit-Pawar-tests-positive

மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவாருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் பாசிடிவ் என வந்ததை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

புனே, சோலாப்பூர் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து விட்டு வீடு திரும்பிய மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவாருக்கு லேசான காய்ச்சல் ஏற்ப்பட்டுள்ளது. அதனையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முதல் பரிசோதனையில் நெகட்டிங் என வந்துள்ளது.

Maharasra

அதன்பின் அஜித் பவார் தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார். பின் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட கொரோனா பரிசோதனையில் பாசிடிவ் என வந்ததை அடுத்து மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மேலும் இது குறித்து அஜித் பவார் கூறியதாவது, தனது உடல்நிலை சீராக இருப்பதாகவும், டாக்டர்கள் அறிவுறுத்தியதால் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் சேர்ந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.