சிறுமிகள் மீது இளைஞர்கள் கொடூர தாக்குதல்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

சிறுமிகள் மீது இளைஞர்கள் கொடூர தாக்குதல்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!


madhya-pradesh-jabalpur-minor-girls-attacked-by-youngst

இளைஞர்கள் நாயை அடிப்பதை தட்டிக்கேட்ட சிறுமிகள் மீது கட்டையால் சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூர், கார்ஹா பகுதியை சார்ந்தவர் அர்ஜுன் சிங். இவரது வீட்டின் வழியே, அப்பகுதியை சார்ந்த பிரின்ஸ் ஸ்ரீவஸ்தவா, மோனு ஸ்ரீவஸ்தவா, ஷிபு தஹியா, பப்லு ஸ்ரீவஸ்தவா 4 இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றுள்ளனர். 

இதன்போது, அர்ஜுன் சிங்கின் வீட்டில் இருந்த வளர்ப்பு நாய், இளைஞர்களை பார்த்து கடுமையாக குரைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் இரும்பு கம்பியை எடுத்து வந்து நாயை தாக்கியுள்ளனர். இதனால் நாய் அலறித்துடிக்க, வீட்டில் இருந்த அர்ஜுன் சிங்கின் பெண் குழந்தைகள் மற்றும் அர்ஜுன் சிங் மாமா முறையுள்ள சிறுமிகள் நாயை காப்பாற்ற வந்துள்ளனர். 

Madhya pradesh

இளைஞர்களை பெண் சிறுமிகள் தடுக்க முயற்சித்தால் மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள், கட்டையை எடுத்து வந்து பெண் சிறுமிகளை அடித்து காயப்படுத்தி இருக்கின்றனர். இந்த விஷயம் நேற்று இரவு நடந்த நிலையில், இந்த நிகழ்வு குறித்த வீடியோ அங்குள்ள நபரால் படமாக்கப்பட்டு இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, கார்ஹா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள, அர்ஜுன் சிங்கும் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.