19 வயது இளம்பெண் பட்டப்பகலில் கடத்தல்: பெட்ரோல் பங்கில் குடும்பத்தினர் கண்முன் துயரம்.!

19 வயது இளம்பெண் பட்டப்பகலில் கடத்தல்: பெட்ரோல் பங்கில் குடும்பத்தினர் கண்முன் துயரம்.!


Madhya pradesh Gwalior Girl kidnapped by 2 Man Gang in Petrol Punk 

 

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குவாலியர், நாக சந்திரவதனி பகுதியில் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் பங்கில் சம்பவத்தன்று 19 வயது இளம்பெண் நின்றுகொண்டு இருந்த நிலையில், அச்சயம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல், இளம்பெண்ணை தங்களின் வாகனத்தில் கடத்திக்கொண்டு சென்றது. 

இளம்பெண் கடத்தி சொல்லப்படும்போது தன்னை விடுமாறு அலறினாலும், அங்கிருந்தவர்கள் விசாரிக்கவோ, செயலை தடுக்கவோ முன்வரவில்லை. குடும்பத்தினர் பெட்ரோல் பங்கின் ஓரமாக இருந்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

பின்த் பகுதியில் இருந்து உறவினர் வீட்டில் நடந்த சுப நிகழ்ச்சிக்காக பெண் தனது குடும்பத்தினருடன் வந்தபோது கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. கடத்தல் ஈடுபட்ட இருவரில் ஒருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். 

இளம்பெண் மற்றும் மற்றொரு நபரை காவல் துறையினர் 2 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண் கடத்தப்பட்ட விடியோவும் வெளியாகியுள்ளது.