பலாத்கார புகாரில் சிக்கிய இளைஞனை நொறுக்கியெடுத்த 12 ஆம் வகுப்பு மாணவி.. தேர்வெழுத சிறப்பு அனுமதி..!

பலாத்கார புகாரில் சிக்கிய இளைஞனை நொறுக்கியெடுத்த 12 ஆம் வகுப்பு மாணவி.. தேர்வெழுத சிறப்பு அனுமதி..!


madhya-pradesh-guna-girl-student-sathya-sahoo-writes-pu

குற்றவழக்கில் கைதாகி சிறையில் உள்ள 18 வயது பள்ளி மாணவி, பொதுத்தேர்வு எழுதி சென்ற நிகழ்வு மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குணா, நானகேடி பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி சந்தியா சாஹு. இவரின் வீட்டருகே வசித்து வந்த 30 வயது இளைஞர், சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரியவந்துள்ளது. 

இந்த தகவலை அறிந்த சிறுமி சந்தியா சாஹூவின் குடும்பத்தினர், 30 வயது இளைஞரின் கை-கால்களை கட்டிப்போட்டு, அவரை வீதியில் இழுத்து சென்று சரமாரியாக அடித்து நொறுக்கினர். சம்பவம் கடந்த பிப். 4 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறுமி சந்தியா சாஹு மற்றும் அவரின் குடும்பத்தினரை கைது செய்தனர். 

Madhya pradesh

அன்றில் இருந்து அவர் சிறையில் உள்ள நிலையில், சிறுமி சந்தியா சாஹு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருவதால், அவருக்கு பொதுத்தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் தான் தேர்வெழுத அனுமதி செய்ய வேண்டும் என்று சிறை நிர்வாகத்திடம் சிறுமி கோரிக்கை வைத்தார். 

மாணவியின் கல்வி எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, சிறைத்துறை நிர்வாகமும் தேர்வு எழுத அனுமதி செய்தது. இதனையடுத்து, இன்று மாணவி சந்தியா சாஹு, காவல் துறையினர் பாதுகாப்புடன் சாரதா வித்யா பள்ளியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் தேர்வு எழுதி முடித்ததும் சிறைக்கு மீண்டும் அழைத்து செல்லப்பட்டார்.