
காதல் ஜோடிகள் அறை எடுத்து தங்கியதை பார்த்த பெற்றோர்கள்!. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!.
ஹைதராபாத்தை சேர்ந்த மனிஷ், அக்சயா ஆகிய இருவரும் சொந்தகாரர்களாக இருந்த நிலையில் இருவரும் 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விஷயம் வீட்டிற்கு தெரிந்ததால் இருவரின் குடும்பத்தாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அந்த இளம் ஜோடிகள் இருவரும் வீட்டில் அவர்களின் காதலை ஏற்றுக்கொள்ளாததால் இரண்டு வாரங்களுக்கு முன்பு, யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வீட்டை விட்டு தனியே சென்றுவிட்டனர்.
அக்சயாவை வீசு திரும்பாத நிலையில் அதிர்ச்சியடைந்த பெற்றோர், தன் மகளை காணவில்லை என போலீஸில் புகார் அளித்தனர். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் தேடிவந்தனர்.
இந்த நிலையில் இருவரும் ஹைதராபாத்தில் ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்த்து. இதனையடுத்து தங்களுடைய இருப்பிடத்தை காவல்துறையினரும், குடும்பத்தினரும் கண்டறிந்து விட்டனர் என்பதை தெரிந்துகொண்டனர்.
இதனை அறிந்த அவர்கள் உடனடியாக 3-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இந்த சம்பவத்தில் இருவருக்கும் கால் முறிவு ஏற்பட்டு இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Advertisement
Advertisement