நள்ளிரவில் வீட்டைவிட்டு வெளியேறிய காதல் ஜோடி!! விடிந்தபோது பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!love couple comit suicide

ஓசூர் அருகே உள்ள ராமச்சந்திரம்  என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் எல்லேஷ். லாரி டிரைவரான இவர் அதே கிராமத்தில் வசித்து வந்த ஜோதி என்ற பட்டதாரி பெண்ணை இரு வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவர்களது காதல் விவகாரம் ஜோதியின் பெற்றோர்களுக்கு தெரிய வந்த நிலையில் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும் ஜோதிக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்க்கவும் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளனர். இதனால் மனமுடைந்த ஜோதி மற்றும் எல்லேஷ் ஜோடி வீட்டை விட்டுவிட்டு வெளியேறி ஒன்றாக தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

love couple

இந்நிலையில் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறிய அவர்கள் காருகொண்டபகுதி என்ற இடத்தில் உள்ள ரயில்வே கேட்டில் வந்த குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  இதில் உடல் சிதறி அவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பெற்றோர்களும், உறவினர்களும் அவர்களை கண்டு கதறி அழுதுள்ளனர். பின்னர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் இருவரின் சிதைந்து கிடந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது..