இந்தியா

கொரோனாவை தொடர்ந்து இந்தியாவிற்கு வந்த மற்றொரு பேராபத்து! பீதியில் மக்கள்!

Summary:

locust have entered in rajasthan

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா தொற்று பரவிய நிலையில் நாளுக்கு நாள் பாதிப்புகள் மற்றும் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனாவை .
கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்த ஆபத்தே முடிவுக்கு வராத நிலையில் தற்போது இந்தியாவிற்கு மீண்டும் ஒரு பெரும் ஆபத்து வந்துள்ளது அதாவது பாகிஸ்தானில் இதுவரை பாதிப்பை உண்டாக்கி வந்த வெட்டுக்கிளிகள் தற்போது ராஜஸ்தான் பகுதிக்கு படையெடுத்து வந்துள்ளன. மேலும் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் வெட்டுக் கிளிகள் தாக்குதலால் விவசாய பயிர்கள் பெரும் அழிவை சந்தித்து வருகின்றன. 

സൗദിയില്‍ വെട്ടുകിളികള്‍ ...

ஆரம்பத்தில் எல்லையோர மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்திய வெட்டுக்கிளிகள் தற்போது உள் மாவட்டங்களிலும் பரவி பயிர்கள், இலை, பூ, காய், பழம்,தண்டு என அனைத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் வெட்டுக்கிளிகளை அழிக்க, தீயணைப்பு வாகனங்கள் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது  கொரோனா ஆபத்தே இன்னும் ஒரு முடிவுக்கு வராத நிலையில் வெட்டுகிளிகள் படையெடுப்பு ராஜஸ்தான் விவசாயிகள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது .

 
 


Advertisement