ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு! முதலமைச்சர் மம்தா அதிரடி அறிவிப்பு!

ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு! முதலமைச்சர் மம்தா அதிரடி அறிவிப்பு!


lockdown extend in west bengal

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. கொரோனவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கட்டுப்படுத்த தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்கள் பாதிப்புகளை அதிகம் கொண்ட மாநிலமாக திகழ்ந்து வருகின்றன. அந்த வகையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் ஒன்றாக இருந்து வரும் மேற்கு வங்கத்தில் இதுவரையில் 60,830 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

west bengal

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 31 வரை வாரத்தில் 2 நாட்கள் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்றும், ஆகஸ்ட் 1 பக்ரீத் தினத்தில் ஊரடங்கு இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.