நெடுஞ்சாலையில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு! பதறவைத்த வைரல் வீடியோ!

நெடுஞ்சாலையில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு! பதறவைத்த வைரல் வீடியோ!


landslide in Uttarakhand


தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகம், உத்தரகண்ட் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. உத்தரகண்ட் மாநிலம் லம்பாகர் மற்றும் பன்னர்பானியில் பலத்த மழை பெய்ததைத் தொடர்ந்து சாமோலியின் புர்சடி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.


இதனால் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை கடந்த 17 மணி நேரமாக தடுக்கப்பட்டது.
நெடுஞ்சாலை திறக்க தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (என்.எச்.ஐ.டி.சி.எல்) குழு செயல்பட்டு வருகிறது. அங்கு ஏற்பட்ட நிலச்சரிவு வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.