சீருடையின்றி, லாக்கப் அருகே பெண்காவலர் செய்த காரியம்.! வீடியோவால் நேர்ந்த விபரீதம் !!



lady-police-did-tiktak-video-in-police-station

குஜராத் மாநிலம் மெஹசானா மாவட்டம் லங்னாஜ் காவல் நிலையத்தில் பணியாற்றுபவர் அர்பிதா சவுத்ரி. இவருக்கு டிக் டாக் வீடியோ செய்ய வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை இருந்து வந்துள்ளது இந்நிலையில் அவர் காவல் நிலையத்தில், சீருடை அணியாமல் லாக் அப் அருகில் நின்று ஹிந்தி பாடல் ஒன்றிற்கு நடனமாடியுள்ளார்.

மேலும் இந்த வீடியோவை அவர் டிக்டாக் செயலியில் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோ வைரலான நிலையில் இதனை கண்ட நெட்டிசன்கள் பலரும் பணியில் உள்ள ஒரு காவலர் சீருடை இல்லாமல் காவல் நிலையத்துக்குள், பொறுப்பில்லாமல் ஆடியதற்கு எதிராக பல கண்டனங்கள் எழுந்தன.



இந்நிலையில் டிக்டாக் வீடியோவை வெளியிட்ட அர்பிதா சவுத்ரியை, இடைநீக்கம் செய்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் மஞ்சிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் மஞ்சிதா கூறுகையில், பணி நேரத்தில் சீருடை இல்லாமல், காவல் நிலையத்திற்குள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் போட்டுள்ளார். இதனால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்’ என கூறியுள்ளார்.